மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 பிப் 2021

புத்துணர்வு முகாமில் யானையை கடுமையாக தாக்கும் பாகன்கள்!

புத்துணர்வு முகாமில் யானையை கடுமையாக தாக்கும் பாகன்கள்!

யானைகள் புத்துணர்வு முகாமில் யானை ஒன்றை பாகன்கள் கடுமையாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில், கோயில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகம் முழுவதிலுமிருந்து 26 கோயில் யானைகள் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமல்யதாவும் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானையை அதன் பாகன்கள் கடுமையாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு மரத்தடியில் யானையைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்குகின்றனர். இதனால் வலி தாங்க முடியாத ஜெயமல்யதா பிளிறுகிறது.

பாகன்கள் கட்டளையை யானை கேட்காததால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில் யானையைத் தாக்கும் பாகன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 21 பிப் 2021