மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

ராமர் கோயில்: மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி!

ராமர் கோயில்: மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி!

ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். மதுரையில் 100 வார்டுகளில் யாத்திரை நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு அளித்தோம். ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டும் அனுமதி வழங்க முடியாது என காவல்துறை எங்கள் மனுவை ரத்து செய்தது.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. எனவே மதுரையில் ரதயாத்திரை நடத்த அனுமதி மறுத்த திலகர் திடல் உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது உதவி காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்று நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ரத யாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் கூட்டம் கூடுதலை தவிர்த்தல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு அனுமதி வழங்கினார்.

-பிரியா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

சனி 20 பிப் 2021