மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

சென்னை: இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் இருக்காது!

சென்னை: இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் இருக்காது!

பருவ மழை அதிக அளவு பெய்துள்ளதால், ‘எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 11 டிஎம்சி நீர் கையிருப்பு இருப்பதால் கோடையை மகிழ்ச்சிகரமாக வரவேற்கிறோம். இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் இருக்காது’ என்று பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரின் மக்கள்தொகை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த 1950ஆம் ஆண்டு சென்னையில் 14 லட்சத்து 91,293 பேர் வசித்து வந்தனர். அது படிப்படியாக உயர்ந்து தற்போது 2021ஆம் ஆண்டு 1 கோடியே 12 லட்சத்து 35,018 பேர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சராசரியாக ஒரு மாதத்துக்குக் குடிநீர் தேவைக்காக 1 டிஎம்சி தண்ணீர் வரை தேவைப்படுகிறது. இவற்றை, அண்டை மாவட்டங்களில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரி அத்துடன் நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஏரிகளுக்கு, தமிழக அரசு மற்றும் ஆந்திர மாநில அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு இரண்டு தவணைகளில் 12 டிஎம்சி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், எந்த ஆண்டும் முழுமையாக வழங்காததுடன், பெரும்பாலான ஆண்டுகளில் பருவ மழைகளும் பொய்த்துப்போவதால் சென்னை மாநகரில் ஆண்டுதோறும் கோடைக்காலம் என்று வந்துவிட்டாலே கூடவே குடிநீர் பஞ்சமும் வருவது வழக்கமாக இருந்து வந்தது.

பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக கல்குவாரி, நிலக்கரி சுரங்கம், விவசாய விளைநிலங்கள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ரயிலில் குடிநீர் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். “ஆனால், இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் ஏரிகளில் போதுமான அளவு குடிநீர் கையிருப்பு இருப்பதால் கோடையைச் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்று பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், “கோடையில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த ஆண்டு தண்ணீருக்கு எங்கும் அலைய வேண்டியது இல்லை. சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளிலேயே 11.22 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இதுதவிர வீராணம் ஏரியிலும் தண்ணீர் உள்ளது. அத்துடன் நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து கடல்நீரைக் குடிநீராக மாற்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் இருப்பு உள்ளதால், விநியோகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதற்காக பழுதான குழாய்கள் மாற்றம், தேவைப்படும் இடங்களுக்கு புதிய இணைப்புகள் வழங்குவது, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் லாரிகளில் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. தற்போது வழங்கப்படுவதுபோல் கோடையிலும் அதிகபட்சமாக 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்களும் அச்சப்பட தேவையில்லை. இதே நிலை வருகிற டிசம்பர் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆண்டு வரவிருக்கும் கோடையை முழுமையாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் இருக்காது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

சனி 20 பிப் 2021