மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

ஏசி பஸ்களுக்கு அனுமதி!

ஏசி பஸ்களுக்கு அனுமதி!

கொரோனாவால், 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதிகொண்ட பேருந்துகளில் 24 - 30 டிகிரி செல்சியஸ் அளவிலேயே குளிர்நிலையை வைத்திருக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் தமிழக அரசுக்குச் சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட 702 பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குளிர் சாதன வசதியுடன் கூடிய ஏசி பஸ்களில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 20 பிப் 2021