மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

ஜெ நினைவு இல்லத் தடை நீட்டிப்பு!

ஜெ நினைவு இல்லத் தடை நீட்டிப்பு!

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்குப் பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், நினைவு இல்லமாக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்குப் பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்தனர்.

மேலும் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிட கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.

இதனிடையே போயஸ் இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா, தீபக் வழக்குகளைச் சேர்த்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

சனி 20 பிப் 2021