மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகள் ரத்து: அரசாணை வெளியீடு!

ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகள் ரத்து: அரசாணை வெளியீடு!

ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகள் ரத்து செய்வதற்கான அரசாணையைத் தமிழக அரசு இன்று (பிப்ரவரி 20) வெளியிட்டது.

2017 ஜனவரி மாதம், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில், நடுக்குப்பத்தை சேர்ந்த மக்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த வன்முறையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து, அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு நபர் நீதி விசாரணைக் கமிஷன் அமைத்தார்.

இதனிடையே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான 308 வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அதைச் செயல்படுத்தும் விதமாக இன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாகப் பதியப்பட்ட வழக்குகளில் உணர்வுப்பூர்வமாகப் போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தப் போராட்டங்களின்போது பதியப்பட்ட வழக்குகளில் காவலர்களைத் தாக்கியது, தீயிட்டுக் கொளுத்தியது உள்ளிட்ட வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளில் சட்டப்பூர்வமான ஆலோசனை பெற்று திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிஏஏ போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதற்காகத் தொடரப்பட்ட வழக்குகள், ஊரடங்கை மீறியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 20 பிப் 2021