மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

‘தர்மசங்கடம் தான்’: பெட்ரோல் டீசல் விலை குறித்து நிர்மலா சீதாராமன்

‘தர்மசங்கடம் தான்’:  பெட்ரோல் டீசல் விலை குறித்து நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது தர்ம சங்கடம்தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 10 தினங்களாகத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விட்டது. மற்ற சில மாநிலங்களில் 90 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தர்மசங்கடமானது தான் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சென்னையில் தொழிலதிபர்கள் வியாபாரிகள் ஆகியோருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பெட்ரோல் விலை உயர்வு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “இது மிகவும் சிக்கலான பிரச்சினை மற்றும் விலையை குறைப்பதைத் தவிர வேறு எந்த பதிலும் யாரையும் நம்ப வைக்காது. இவ்விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரச்சினையை தீர்க்க வழி உள்ளதா என ஆலோசிக்க வேண்டும். எண்ணெய் உற்பத்தி நாடுகள், உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளன. இது பெட்ரோல் விலையில் மேலும் அழுத்தம் கொடுக்கும்.

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே, என்னால் மட்டும் முடிவு செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை வந்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோல் டீசலுக்கு பதில் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த அனைவரும் முன் வர வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 20 பிப் 2021