சேதுபதி வெளியாகி 5 வருடம் நிறைவு : பெஸ்ட் 5 விஷயங்கள்!

public

எந்த கேரக்டரில் என்றாலும், உடனடியாகக் கச்சிதமாகப் பொருந்திப்போகும் நடிகர்கள், சினிமாவுக்கு அத்திப் பூத்தாற்போல் தான் அமைவார்கள். அப்படியான ஒரு நடிகர் விஜய்சேதுபதி.

க்ளீன் ஷேவ் லவ்வர் பாயாக என்றாலும் சரி, 80 வயது நரை விழுந்த கிழவன் என்றாலும் சரி நடிகராய் மிளிர்வார். இவரின் சினிமா பயணத்தில் கமர்ஷியலாக விஜய்சேதுபதியை அடுத்தப் பரிணாமத்துக்கு எடுத்துச் சென்ற படங்களில் ஒன்று ‘சேதுபதி’. 2014ல் கிராமத்து இளைஞனாக பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்தவர் 2015-ல் சீரியஸாக ‘பொறம்போக்கு எனும் பொதுவுடைமை’ மற்றும் லவ்வர் பாயாக ‘நானும் ரவுடிதான் படங்களைக் கொடுத்தார். காதல், சமூகம் சார்ந்த படம், கிராமத்துக் கதை கூடவே ஆக்‌ஷன் மாஸ் படமும் இணைந்தால் தான் கமர்ஷியல் ஹீரோவாக ஒரு முழுமையடைய முடியும். அப்படி, அந்த நேரத்தில் விஜய்சேதுபதி நடித்து கமர்ஷியலாக மாஸ் ஆக்‌ஷனாக 2016ல் வெளியான படம் ‘சேதுபதி’. இப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. சேதுபதி படத்தில் அமைந்துவிட்ட பெஸ்ட் 5 விஷயங்களைப் பார்த்துவிடலாம்.

* என்னதான் ஆக்‌ஷன் கமர்ஷியல் மசாலாவாகப் படம் உருவானாலும் அதில் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனால் மட்டுமே ஒட்டுமொத்த படமும் வெற்றிபெற முடியும். போலீஸ் அதிகாரியான சேதுபதி வீட்டுக்கு வெளியே கோபமான இன்ஸ்பெக்டர், மீசை முறுக்கும் ஹீரோ. ஆனால், குடும்பம் என்று வந்துவிட்டால் செம சாது. ரம்யா நம்பீசனுடனான காதல், குழந்தைகளிடம் காட்டும் பாசம் என செண்டிமென்டிலும் படம் பக்காவாக செட்டாகியிருக்கும்.

* இரண்டாவது, போலீஸ் விசாரணை காட்சிகள். விஜய்சேதுபதியின் டிவிஷனுக்குள் வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்படுகிறார். யார் கொலை செய்தது என்று விசாரிக்கும் காட்சிகள், கொலை செய்த வில்லனான வேல ராமமூர்த்தியின் ஊருக்குள்ளேயே சென்று, அவரின் கோவில் திருவிழாவில் தைரியமாக இறங்கி, அவரையே கைது செய்து மாஸ் காட்டியிருப்பார். போலீஸ் அதிகாரியை கொலை செய்ததை கண்டுபிடிப்பதும், துப்பாக்கியால் சுடப்படும் சிறுவனின் கேஸை கண்டிபிடிப்பதும் என விசாரணைக் காட்சிகள் நன்றாக வந்திருக்கும்.

* ஒரு படம் வெற்றியாகவேண்டுமென்றால் நான்கு மாஸ் காட்சிகள் கட்டாயம் இடம் பெறவேண்டும். அப்படி, இருந்த இடத்திலிருந்து கொண்டே ஒரு சீனில் மாஸ் காட்டியிருப்பார். சேதுபதியின் வீட்டுக்குள் விவேக் பிரசன்னா புகுந்துவிடுவார் . அப்போது மகனிடம் துப்பாக்கியை எடுத்துவரச் சொல்லி ‘ஒரு அடி எடுத்துவச்சா நெத்துப் பொட்டுல சுடுடா’ என சொல்லுமிடம் மாஸ். இன்ஸ்பெக்டரிடம் கைநீட்டுவதில் துவங்கி வில்லன் வரை பளார் என ஒரே அறையில் வழிக்கு கொண்டுவருவதெல்லாம் சேதுபதியை ரசிகர்கள் கொண்டாட காரணம்.

* படமென்றால் ஹீரோ ஜெயித்துக் கொண்டே இருந்தால் வேலைக்காகாது. ஹீரோவுக்கு ஒரு பிரச்னை வரும், அதை எப்படி சரி செய்கிறார் என்பதும் படத்தின் ஓட்டத்துக்கு கைகொடுக்கும். அப்படியான காட்சியாக தான், போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் ஷூட்டிங். திட்டமிட்டு சிக்க வைத்திருக்கிறோம் என கண்டுபிடிக்கும் இடம், அதை சரிசெய்யும் இடமெல்லாம் அப்படியான காட்சிகளே. அதோடு, முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக விஜய்சேதுபதி நடித்திருந்ததால் , ரசிகர்களுக்கும் இந்த காட்சிகள் புதுமையான ட்ரீட்மெண்டாகவே இருந்தது.

* இறுதியாக, க்ளைமேக்ஸ். எப்படியும் ஹீரோ கெத்துக் காட்டப் போகிறார் என்பது தெரியும். ஆனால், எப்படி நடக்கப் போகிறது, வில்லனாக வேல ராமமூர்த்தியை எப்படி ஹீரோ டீல் செய்யப் போகிறார் என்பதிலும் வெரைட்டியாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், படத்தில் போலீஸ் அதிகாரியாக நாட்டைக் காப்பாற்றப் போவதில்லை. ஒரு போலீஸ், அந்தப் போலீஸ் குடும்பத்துகு ஒரு பிரச்சனை. அதை எப்படி சரி செய்தார் என்பதில் இருக்கும் ட்விஸ்ட்.. எந்த வித குழப்பமும், அதட்டலும், புளிப்பும் இல்லாமல் சரியாக அமைந்திருக்கும் சேதுபதி.

ஆக, சேதுபதி ஒரு பக்கா கமர்ஷியல். விஜய்சேதுபதியின் கரியரில் வெரைட்டியான ரோல்களை கையில் எடுத்துக் கொண்டிருந்த அவருக்கு லைட்டான ஒரு சினிமாவாக , கமர்ஷியலில் பெரிதளவு கைகொடுத்த சினிமாதான் சேதுபதி..!

**- ஆதினி**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *