மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தை குறைப்பதுடன் பயணம் எளிமையாகவும் வசதியாகவும் அமைய மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. அலுவலகங்களுக்குச் செல்பவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் இது எளிமையான பயணமாக இருந்தாலும், சாமானிய மக்களுக்கு பயணச்சீட்டு கட்டணம் பெருந்தடையாக இருந்தது.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், தினக்கூலிக்கு வேலை செய்பவர்களால் தினமும் மெட்ரோ ரயிலில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.

இந்த சூழலில் மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மெட்ரோ திட்டத்தின் கட்டம்-1 முழுமையாக முடிக்கப்பட்டு, பல்வேறு வழித்தடப் பகுதிகளில் 54.15 கி.மீ. நீளத்திற்கு பயணிகள் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2-க்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மெட்ரோ திட்டம் தொடங்கி 5 ஆண்டுகளில் இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது.

0 - 2 கிமீ வரை கட்டணம் ரூ.10,

2 முதல் 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 ஆக தற்போது உள்ள நிலையில், இனி 2 முதல் 5 கிமீ வரை பயணக் கட்டணம் கட்டணம் ரூ. 20 ஆக இருக்கும்

6 முதல் 12 கிமீ வரை கட்டணம் ரூ.30 ஆக இருந்த நிலையில் இனி, 5 கிலோ மீட்டர் தூரம் முதல் 12 கி.மீதூரம் வரை ரூ.30

12 கி.மீ முதல் 18 கி மீ வரை பயணிக்கக் கட்டணம் ரூ. 50 ஆக இருந்த நிலையில் இனி 12 கிலோ மீட்டர் தூரம் முதல் 21 கி.மீ வரை பயணிக்கக் கட்டணம் ரூ.40

18 கி.மீ முதல் 24 கி.மீ வரை பயணிக்கக் கட்டணம் ரூ. 60, 24 கிமீ மேல் பயணித்தால் ரூ.70 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 21 முதல் 32 கிமீ வரை பயணக் கட்டணம் 50ஆகக் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நியமனத்தின் தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படை கட்டணத்திலிருந்து 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்

ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் தற்போதுள்ள கட்டம் 1 ன் 45 கி.மீ., வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் ரூ.100 ஆகும். தற்போது துவக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ., நீளக் கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ., வழித்தடத்திற்கும் அதே ரூ.100 ஆக இருக்கும்.

ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம், தற்போதுள்ள கட்டம் 1 ன் 45 கி.மீ., வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் ரூ.2,500 ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலா 9 கி.மீ., நீளக் கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ., வழித்தடத்திற்கும் அதே ரூ.2,500 கட்டணம் தான்

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடி எனவும் முதல்வர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 20 பிப் 2021