மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் அல்வா!

ரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் அல்வா!

பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் 'சி' நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. அந்த நெல்லியை வைத்து ரிலாக்ஸ் டைமில் இந்த அல்வா செய்து சாப்பிடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

எப்படிச் செய்வது?

200 கிராம் பெரிய நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து ஆறவைக்கவும். பிறகு, கொட்டைகளை நீக்கிவிட்டு சதைப்பகுதியைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த நெல்லிக்காய் விழுது, 250 கிராம் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இடையிடையே சிறிதளவு நெய் சேர்க்கவும். 15 நிமிடங்கள் கைவிடாமல் கிளறிய பிறகு கலவை தளதளவென்று வரும் பக்குவத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்க்கவும். கலவையை கரண்டியில் எடுத்தால் பிசுபிசுப்புத்தன்மை இல்லாத பக்குவம் வரும் வரை கிளறவும். இடையிடையே சிறிதளவு நெய், ஆறு பாதாம் பருப்புகள், இரண்டு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடவும். அதே பாத்திரத்தில் வைத்தால் கெட்டிப்படும். நெல்லிக்காய் அல்வா ரெடி.

சிறப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

சனி 20 பிப் 2021