மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

தேர்தல் நாள்: மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

தேர்தல் நாள்: மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்பதால் இந்த மாத கடைசிக்குள் அரசு திட்டங்கள் அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப அறிகுறியாக தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 25ஆம் தேதி துணை ராணுவப்படை தமிழகம் வருகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக இந்தியத் தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கருத்துகளைக் கேட்டறிந்தார். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதியில் தேர்தல் நடத்தலாம் என்ற அட்டவணையை தேர்தல் கமி‌ஷனர் தயாரித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் கடைசி வாரம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதால் எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்ற விவரத்தைத் தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா டெல்லியில் அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்பதால் இந்த மாத கடைசிக்குள் அரசு திட்டங்கள் அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு வருகை தர உள்ளனர். தேர்தலையொட்டி பிப்ரவரி 25ஆம் தேதி சென்னையில் ஆஜராக மத்திய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மத்திய ஆயுதப்படையின் 45 மத்திய பாதுகாப்புப் படையினர் தேர்தல் பணிக்காக தமிழகத்துக்கு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

-ராஜ்

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

சனி 20 பிப் 2021