மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 பிப் 2021

32 நாளில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

32 நாளில் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், 32நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், தடுப்பூசி போடுவது தொடர்பான புள்ளி விவரங்களை இன்று (பிப்ரவரி 19) மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று காலை 8 மணிவரை, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது. இந்த இலக்கை அடைய இந்தியாவுக்கு 34 நாட்கள் தேவைப்பட்டது. தடுப்பூசி போடுவதில் உலகின் இரண்டாவது வேகமான நாடாக இந்தியா உள்ளது. இன்று காலை 8 மணி வரை மொத்தம் 1,01,88,007 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 62,60,242 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள். 6,10,899 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள். 33,16,866 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள் ஆவர்.

2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கியது. 34 ஆம் நாளான நேற்று 6,58,674 தடுப்பூசிகள் போடப்பட்டன. நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,39,542ஆக உள்ளது. நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை இன்று 1,06,67,741ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 19 பிப் 2021