மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: பாம்பே கார டோஸ்ட்!

ரிலாக்ஸ் டைம்: பாம்பே கார டோஸ்ட்!

அடிப்படையான சில பொருட்கள், சரியான அளவுகள், முறையான பக்குவம் மூன்றும் சேர்ந்தால், நளபாகத்தில் பின்னியெடுக்கலாம். அந்தப் பொறுமையும் பக்குவமும் இல்லாததால்தான், பலர் நேரம் கெட்ட நேரத்தில், தரம் இல்லாத உணவுகளைச் சாப்பிட்டு, வயிற்றைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ரிலாக்ஸ் டைமில் சாப்பிட இந்த பாம்பே கார டோஸ்ட் உதவும்.

எப்படிச் செய்வது?

மிக்ஸியில் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, பூண்டுப் பற்கள் ஐந்து, மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்... மூன்றையும் நன்கு அரைத்துக்கொள்ளவும். மூன்று முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு, அரைத்த மசாலா சேர்த்து, நன்கு அடித்துக்கொள்ளவும். பிரெட்டை, முட்டைக் கலவையில் நனைத்து, தோசை தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய்விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும்.

குறிப்பு

முட்டையில் பால், சர்க்கரை கலந்து அடித்து, அந்தக் கலவையில் பிரெட்டை நனைத்து, டோஸ்ட் செய்தால், ‘பாம்பே ஸ்வீட் டோஸ்ட்’ கிடைக்கும்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 19 பிப் 2021