மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 பிப் 2021

அந்தகன், கூகுள் குட்டப்பன் வரிசையில் தமிழுக்கு வரும் அடுத்த ரீமேக்!

அந்தகன், கூகுள் குட்டப்பன் வரிசையில் தமிழுக்கு வரும் அடுத்த ரீமேக்!

இது ரீமேக் காலம்.. தொடர்ச்சியாக மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களின் தமிழ் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகிவருகிறது.

சமீபத்தில், சுராஜ் மற்றும் செளபின் நடிப்பில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்துக்கு தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற பெயருடன் அறிவித்தனர். சுராஜ் கேரக்டரில் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். செளபின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடிக்கிறார். நாயகியாக லாஸ்லியா மற்றும் காமெடி டிராக்கில் யோகிபாபு நடிக்கிறார்.

கதை இதுதான், கிராமத்து சூழலில் வாழும் தந்தையான சுராஜூக்கு வீட்டு உதவிக்காக, ரோபோ ஒன்றை அனுப்பிவைக்கிறார் ஜப்பானில் பணியாற்றும் மகன் செளபின். விஞ்ஞானத்துக்கும் பாசத்துக்கும் நடுவிலான மெல்லிய கதையாக அட்டகாசமாக உருவாகியிருக்கும் திரைக்கதை. இப்படத்தை சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்க, கே.எஸ்.ரவிக்குமாரே தயாரிக்கிறார்.

அதோடு, ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘அந்தகன்’. பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது. அடுத்ததாக, தற்பொழுது புதிய படத்துக்கான அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் வெளியான மிக முக்கிய சினிமா ‘ஹெலன்’. இப்படத்தில் கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் நடித்த அன்னா பென் நடித்திருந்தார். நாயகி முக்கியத்துவம் கொண்டப் படமாக வெளியாகிப் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான், ‘ அன்பிற்கினியாள்’. அன்னா பென் நடித்த கேரக்டரில் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், கீர்த்தி பாண்டியனின் ரியல் தந்தையான நடிகர் அருண் பாண்டியன் தான், படத்திலும் இவருக்கு தந்தையாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் தந்தை ரோலில் லால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

த்ரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியிருக்கிறது. நிச்சயம் மலையாளத்தைப் போலவே, தமிழிலும் பெரியளவில் வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகமில்லை.

- ஆதினி

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 18 பிப் 2021