மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 பிப் 2021

பசு அறிவியல் தேர்வு: சர்ச்சைப் பகுதி திருத்தம்!

பசு அறிவியல் தேர்வு: சர்ச்சைப் பகுதி திருத்தம்!

பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும் பசு அறிவியல் தேர்வுக்கான பாடத்தில் இடம்பெற்றிருந்த சில சர்ச்சையான பகுதிகள் ஆங்கிலத்தில் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டு மாடுகளின் அறிவியல், பொருளாதாரம், சுகாதாரம், வேளாண்மை மற்றும் கலாச்சார தொடர்புகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் சார்பில் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஜனவரி 12ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில் "நாட்டுப்பசு அறிவியல்" என்ற தலைப்பில் பிப்ரவரி 25ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள தேர்வில், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவர்களும் பங்கேற்க அறிவுறுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அல்லாத பிற குடிமக்களும் விரும்பினால் இந்த தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , ஆங்கிலத்தில் மட்டும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களில் கதிர்வீச்சுகளை கட்டுப்படுத்த மாட்டு சாணம் பயன்படுத்தப்படுவதாகவும், எரிவாயு கசிவு விபத்தால் பாதிக்கப்பட்ட போபால் பகுதி மக்களை பாதுகாக்க மாட்டு சாணம் பயன்படுவதாகவும் இந்த பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதோடு பசு வதைக்கும், நிலநடுக்கத்திற்கும் தொடர்பும் இருப்பதாகவும், ஜெர்சி மாடுகள் தரம் குறைந்த பாலை தருவதாகவும், நாட்டு மாடுகள் மஞ்சள் நிறத்திலான தரமான பாலை தருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டு மாடுகள் கறக்கும் பாலில் தங்கம் கலந்திருப்பதற்கான தடயமே மஞ்சள் நிறம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அறிவியல் ஆதாரமற்ற கருத்துகள் என எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட பாடத்திட்டம் திருத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 3 பிரிவுகளாக புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பிரிவில் பசுவானது தூய்மை, யதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவும், அதன் முகம் அப்பாவித்தனத்தையும், கண்கள் அமைதியையும், காதுகள் புத்திக்கூர்மையையும் எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் இன்னும் இப்பாடத்திட்டம் அப்படியே தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 17 பிப் 2021