^12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள்!

public

h

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று (பிப்ரவரி 17) வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக 8 மாதங்களுக்கு மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. வழக்கமாக மார்ச் – ஏப்ரல் மாதத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடத்தி முடிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையிலும், பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டதாலும் தேர்வு தேதி மே மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020 – 2021ம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும். தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர். காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத் தேர்வு நடைபெறும். காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளைப் படிக்க அனுமதிக்கப்படுவர். காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**பாட வாரியான தேர்வு தேதிகள்**

மே 3- மொழி தாள்

மே 5- ஆங்கிலம்

மே 7 – கணினி அறிவியல், பொலிட்டிக்கல் சயின்ஸ்

மே 11 – இயற்பியல், எகனாமிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி,

மே 17 – கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பையோலஜி,

மே 19 – உயிரியல், வரலாறு, பயாலஜி

மே 21- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *