மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன்!

சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து ஜாமீன் கேட்டு ஹேம்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் சித்ராவும் பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரது தற்கொலைக்கு நான் காரணமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறி நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் நேற்று (பிப்ரவரி 15) நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை சித்ரா வழக்கில் கைதான அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு 60 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 16 பிப் 2021