மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும்: கட்கரி

மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும்: கட்கரி

சமீப நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், மாற்று எரிபொருளுக்கு மாற அனைவரும் முன்வர வேண்டும் என்று அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை உள்ளிட்ட சாலை திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாகச் சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்துள்ளார்.

இன்று மதியம் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்தபடி, ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரைச் சுத்திகரிப்பு செய்யும் மையத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாகச் சென்னையில் இன்று மாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

சென்னை - பெங்களூரு இடையே புதிய பசுமை வழிச்சாலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். 8 வழிச் சாலை உட்படத் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சாலைத் திட்டங்கள் குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்றார்.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்த கேள்விக்கு, மாற்று எரிபொருளைப் பயன்படுத்த அனைவரும் முன் வரவேண்டும். விவசாயிகள் டிராக்டர்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டும். மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை வரவேற்பைப் பெற்றுள்ளது. கழிவு நீரைக் கூட பணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார் கட்கரி.

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

செவ்வாய் 16 பிப் 2021