மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

பூரண மதுவிலக்கு: செவி சாய்க்குமா தமிழக அரசு!

பூரண மதுவிலக்கு: செவி சாய்க்குமா தமிழக அரசு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை தட்டான்குளம் பிரதான சாலை மற்றும் மேலூர் சாலையில் பள்ளிக்கூடம் அருகே அமைக்கப்பட்ட மதுக்கடையை அகற்றத் தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி தாஹா முகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று (பிப்ரவரி 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள மதுக்கடை பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் கடை மாற்றப்படுவது குறித்தும், தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் உள்ளது? அமைவிட ஆட்சேபனை தொடர்பாக வந்த புகார்கள், நிராகரிக்கப்பட்ட புகார்கள் ஆகியவை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இந்த விசாரணையின் போது, பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் பகுதியில் வைப்பதற்கு மதுக்கடைகள் ஒன்றும் மளிகைக் கடையோ அல்லது புத்தகக் கடையோ கிடையாது . ஒட்டு மொத்த தமிழகமும் மதுவில் மூழ்கியுள்ளது. அதாவது ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ தமிழகம் முழுவதும் மது ஆறாக ஓடுகிறது. ஆனால் அதுபற்றி தமிழக அரசு கவலைப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், பூரண மதுவிலக்கை அரசு படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் அதிகரிக்கும், குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும் எனப் பல நேர்மறையான முன்னேற்றங்களை அரசுக்குப் பட்டியலிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் இந்த யோசனைகளைத் தமிழக அரசு உற்றுநோக்கிக் கவனிக்குமா? என்று கேள்வி எழுப்பினர். இறுதியாக டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ.30ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் தமிழக அரசு, பொது சுகாதாரத்துக்காக ரூ.90 ஆயிரம் கோடி செலவிடுவதாக சுட்டிக்காட்டினர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 16 பிப் 2021