மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்!

ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்!

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 2009ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர்.

கடும் இழுபறிக்குப் பிறகு வெளியான முடிவில் ராஜகண்ணப்பன் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ப. சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, திருப்பூருக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி சிதம்பரத்தை ரீ கவுண்ட் மினிஸ்டர் என்று தாக்கி பேசினார். பிரதமரின் பேச்சு இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே சிதம்பரத்துக்கு எதிராக ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கு சுமார் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இறுதியாக நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி, ஆர்.தியாகராஜன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ராஜ கண்ணப்பன் சார்பில் வழக்கறிஞர் ஜி.சரவண குமார் ஆஜராகி இறுதி வாதத்தை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் எனப் பட்டியலிடப்பட்டிருந்தது . அதன்படி 10:30 மணிக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, '2009 ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என்று கூறி அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 16 பிப் 2021