மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

இன்று முதல் பாஸ்டேக் கட்டாயம்: இல்லையெனில் இரண்டு மடங்கு வசூல்!

இன்று முதல் பாஸ்டேக் கட்டாயம்: இல்லையெனில் இரண்டு மடங்கு வசூல்!

வாகன உரிமையாளர்கள் பாஸ்டேக் நடைமுறைக்குள் கட்டாயம் வர வேண்டும். இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரி செலுத்தி கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது கொடுக்க கூடுதல் நேரம் எடுப்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நேரம் விரயமானது.

இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பாஸ்டேக் என்ற முறையைக் கொண்டு வந்தது. இந்த நடைமுறையில் சுங்கச்சாவடியில் வாகன நம்பரை ஸ்கேன் செய்து தானாகவே நமது அக்கவுன்ட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும். வாகனம் நீண்ட நேரம் நிற்க வேண்டியதில்லை. ஆனால், இன்னும் பலர் பாஸ்டேக் முறையைப் பின்பற்றுவதில்லை.

இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள நிதின் கட்கரி, “அனைத்து வாகனங்களும் இந்த நடைமுறைக்குள் இன்னும் வரவில்லை. இன்று (பிப்ரவரி 15) நள்ளிரவில் இருந்து பாஸ்டேக் கட்டாயம்.

ஒருவேளை பாஸ்டேக் வசதி இல்லாமலோ, செல்லுபடியாகாமலோ இருந்தால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

திங்கள் 15 பிப் 2021