மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

பிரச்சார மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா!

பிரச்சார மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா!

பிரச்சார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு சமீப நாட்களாக இந்தியாவில் குறைந்து வருகிறது. அதே சமயத்தில் முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. எனினும் உலக நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. அதுபோன்று குஜராத் மாநிலத்தில் வதோதரா உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி நேற்று (பிப்ரவரி 14) வதோதரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சார மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கியதால் அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் தாங்கிப்பிடித்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் அகமதாபாத் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குஜராத் முதல்வர் மயங்கி விழுந்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மருத்துவமனையில் விஜய் ரூபானிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் முடிவு இன்று வெளியான நிலையில் அதில் குஜராத் முதல்வருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே குஜராத் முதல்வர் சோர்வாகக் காணப்பட்டதாகவும் இதனால் பொதுக்கூட்டங்களில் பேசுவதை ரத்து செய்யலாம் என கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியும், அதை மறுத்து விஜய் ரூபானி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 15 பிப் 2021