மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

சிலிண்டர் விலை - மக்கள் மீது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: கமல்

சிலிண்டர் விலை - மக்கள் மீது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: கமல்

மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்தைப் பொறுத்து மாதம்தோறும் சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பொது முடக்கக் காலத்தின் போது கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருந்த நிலையில் சிலிண்டர் விலையும் குறைந்திருந்தது. அதன்பிறகு, சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 75 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4ஆம் தேதி ரூ.25 அதிகரித்து 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.50 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல், டீசல், காய்கறி விலையைத் தொடர்ந்து தற்போது சிலிண்டர் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

திங்கள் 15 பிப் 2021