மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

பெட்ரோலில் எத்தனால்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

பெட்ரோலில் எத்தனால்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால், டேங்கிற்குள் தண்ணீர் கசியாமல் வாகன ஓட்டிகள் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகத் தென் தமிழகத்தில், வாகன ஓட்டிகள், பெட்ரோல் நிரப்பிய பிறகு வாகனங்களை இயக்குவதற்குச் சிரமப்பட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதில் கலப்படம் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக மத்திய அரசின் ஆணைப்படி பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலந்து விநியோகிக்கப்படுகிறது. இதனால், வாகன பங்கிற்குள் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, வாகனத்தைக் கழுவும்போதும், மழை பெய்யும்போதும் பெட்ரோல் டேங்கில் நீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈர்க்கவும், அதை (எத்தனால்) தண்ணீராக மாற்றவும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. இது டேங்கின் அடிப்பகுதிக்குச் சென்று தங்கிக்கொண்டு, வாகனம் ஓட்டும்போது சிரமங்களை ஏற்படுத்தும்.

வாகனங்களை இயக்கும் போது கடினமாக இருக்கும் அல்லது ஜெர்க் ஆகக் கூடும். பெட்ரோல் டேங்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு. வாடிக்கையாளர்கள் சில்லறை விற்பனை நிலையத்தில் பெட்ரோல் - டீசல் தரத்தைச் சரிபார்த்துக் கொள்ளலாம். ஆனால் வாகனம் பெட்ரோல் விற்பனை நிலையத்தினை விட்டு வெளியேறிய பிறகு எங்களால் எந்த வித உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 15 பிப் 2021