மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

மாணவி போட்ட கடத்தல் நாடகம்!

மாணவி போட்ட கடத்தல் நாடகம்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.பார்ம் படிக்கும் கல்லூரி மாணவியை ஆட்டோ டிரைவர்கள் கடத்தி, கூட்டு பாலியல் வன்முறை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த மாணவியே குடும்பப் பிரச்சினை காரணமாகக் குடும்பத்தைவிட்டுப் பிரிவதற்காக போட்ட நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவியைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக பேசிய அவர் “கட்கேசர் மற்றும் கீசராவின் வாகன ஓட்டுநர் சங்கங்கள் விசாரணையில் முழுமையாக ஒத்துழைத்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் காவல்துறை சார்பாக மன்னிப்பு கோருகிறோம். மன்னிக்கவும். அது எங்கள் வேலை. அனைத்து சந்தேகங்களையும் நாங்கள் தெளிவுப்படுத்த வேண்டியிருந்தது” என கூறினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராச்சகொண்டா போலீஸ் எல்லைக்குட்பட்ட யம்னாம்பேட்டிற்கும், அன்னோஜிகுடாவிற்கும் இடையில் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை சம்பவ நாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆய்வு செய்தன'' போலீஸ் குழுக்கள்.

கடத்தப்பட்டவர்கள் தன்னை யம்னாம்பேட்டை கிராமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவரை அன்னோஜிகுடாவில் இறக்கிவிட்டதாகவும் அந்தப் பெண் கூறியிருந்தார். அவரது காலில் காயங்களுடன் ஆடைகள் கலைந்த நிலையில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார். இருப்பினும், சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்தபோது அந்த மாணவி யம்னான்பேட்டில் ஆட்டோவிலிருந்து தானாக முன்வந்து இறங்கியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர் யன்மன்பேட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து மற்றொரு ஆட்டோவில் ஏறி அன்னோஜிகுடாவில் இறங்கிய வரை பெற்றோரிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்துள்ளார். பின்னர், அன்னோஜிகுடா வந்தவுடன் பெற்றோர் அழைப்புக்கு பதிலளித்துள்ளார் அப்போது போலீஸாரும் பெற்றோருடன் இருந்துள்ளனர்.

அப்போது, மாணவி இருக்கும் நேரடி இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளும்படி நாங்கள் அவரிடம் கேட்டோம். அதன் பின்னர், மாணவியை நாங்கள் ஆடைகள் களைந்த நிலையில் பார்த்தோம்” என தெரிவித்தார்.

மேலும், கமிஷனர் கூறுகையில், “அவர் முட்புதர்களை நோக்கி ஓடி விழுந்த காட்சிகள் எங்களிடம் உள்ளன. அவர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார். 19 வயதான அந்த பி.பார்மசி மாணவி கல்லூரி பேருந்திலிருந்து இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி, தனது தாயை அழைத்து, டிரைவர் தன்னை ஆர்.எல்.நகர் நிறுத்தத்தில் இறக்கிவிடவில்லை, மாறாக அதிவேகத்தில் செல்வதாக தெரிவித்தார். அதன்பிறகு அவளுடைய மொபைல் அணுக முடியவில்லை. தகவல்களின் அடிப்படையில், அனைத்து காவல் நிலையங்களும் எச்சரிக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தில் அந்த மாணவி மீது சந்தேகம் எழுந்து காவல்துறை மீண்டும் அவரிடம் விசாரித்தபோது, அவரது அறிக்கையில், முன்னுக்குபின் முரணாக இருந்தன என்று போலீசார் தெரிவித்தனர்.

அதன்பின், அந்த மாணவியை தீவிரமாக விசாரணை செய்தபோது, மாணவி தான் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டார். குடும்ப பிரச்சினைகள் காரணமாக, தான் வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அவர் ஒப்புக்கொண்டார். தன் தாய்க்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்த பின்னர், இவ்விவகாரத்தில் போலீசாரும் ஈடுபட்டதால், பீதியடைந்து, பயந்து, ஒரு நாடக கதையை அரங்கேற்றியுள்ளார்" என தெரிவித்தார். மேலும் “இந்த வழக்கை விசாரித்து முடிக்க நாங்கள் மூன்று தூக்கமில்லாத இரவுகளை கழித்தோம்" என்று போலீஸ் கமிஷனர் பெருமூச்சுடன் கூறினார்.

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

ஞாயிறு 14 பிப் 2021