மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு எப்போது? துணை முதலமைச்சர் ஆய்வு!

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு எப்போது? துணை முதலமைச்சர் ஆய்வு!

கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது திறந்து வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப்ரவரி 13) ஆய்வு செய்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பஸ் நிலையம் நிலையம் கட்டுவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. தற்போது இந்தப் புறநகர் பஸ் நிலையத்தில் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் ஒட்டியுள்ள பகுதிகளில் மாநகரப் பஸ்கள் வந்து செல்லும் வகையில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இன்னும் சில நாட்களில் மாநகர பஸ் நிலையம் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ் நிலையம் கட்டுமான பணி 60 சதவிகிதத்துக்கு மேல் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புறநகர் பஸ் நிலையக் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் சி.எம்.டி.ஏ. உயரதிகாரிகள், செங்கல்பட்டு மாவட்ட அதிமுகவினர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

துணை முதலமைச்சரின் இந்த ஆய்வுக்குப் பின் பேருந்து நிலைய பிரதான கட்டட முகப்பு வளைவுகள், வரவேற்பு வளைவுகளை முழுவதும் கான்கிரீட்டால் அமைப்பதில் ஏற்படும் செலவைக் குறைக்க, சில வழிமுறைகளைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முகப்பு வளைவுகளில் அடித்தளம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் கான்கிரீட்டைப் பயன்படுத்துவது என்றும், மேல் பகுதிகளுக்கு, இரும்பு பிரேம்களைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, பேருந்து நிறுத்தத்தில் வரவேற்பு வளைவு அமைப்பதிலும், பெரும்பகுதிக்கு இரும்பு பிரேம்களைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், திட்ட செலவை, 2.51 கோடி ரூபாய் வரை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 14 பிப் 2021