மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை: மூன்றே மணி நேரத்தில் மீட்பு!

கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை: மூன்றே மணி நேரத்தில் மீட்பு!

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் 3 மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி விசூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு நேற்று முன்தினம் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை நேற்று மதியம் காணாமல் போனதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கடலூர் புதுநகர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டிஎஸ்பி சாந்தி தலைமையிலான காவல் ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அக்குழந்தையை ஒரு பெண் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குழந்தையுடன் அந்தப் பெண் புதுச்சேரி பேருந்தில் ஏறிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக புதுச்சேரி காவல் துறையினருக்கும் குழந்தை கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து குழந்தையைக் கடத்திய பெண் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து புதுச்சேரி போலீசார் உதவியுடன் அங்குச் சென்ற தமிழக போலீசார் மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் குழந்தையுடன் அந்தப் பெண்ணை கைது செய்து கடலூர் அழைத்து வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் குழந்தையைக் கடத்திய பெண் புதுச்சேரி பன்னிதிட்டு பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்பது தெரியவந்தது. அவரிடம் குழந்தையை எதற்காக கடத்தினர் என்பது குறித்தும் இதற்கு முன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே 3 மணி நேரத்தில் மீட்கப்பட்ட குழந்தையைத் தாய் பாக்கியலட்சுமியிடம் கடலூர் டிஎஸ்பி சாந்தி ஒப்படைத்தார்..

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 14 பிப் 2021