மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு ரூ.286.91 கோடி ஒதுக்கீடு!

புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு ரூ.286.91 கோடி ஒதுக்கீடு!

புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.286.91 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் புரெவி, நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு சமீபத்தில் சென்னை வந்தது. முதலமைச்சர், தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திய அந்தக் குழு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது. பின்னர் தமிழக உயர்மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியது. நான்கு நாட்கள் ஆய்வை முடித்துவிட்டு டெல்லிக்குச் சென்று, மத்திய அரசிடம் புயல் சேதம் குறித்து அறிக்கையை அளித்தது.

இந்த நிலையில் தேசிய பேரிடர் நிதி ஒதுக்குவது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (பிப்ரவரி 13) தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், புயல், வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியாக ரூ.3113.15 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிப்படைந்த தமிழகத்துக்கு 286.91 கோடி ரூபாய், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 9.91 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர பெரு வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்த பிகாருக்கு ரூ.1255.27 கோடியும், தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கை எதிர்கொண்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கு 280.78 கோடி ரூபாயும் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வெட்டுகிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்துக்கு 1280.18 கோடி ரூபாய் நிதி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2020-21 நிதியாண்டில் 19,036.43 கோடி ரூபாய் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 4409.71 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

ஞாயிறு 14 பிப் 2021