மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

விஷவாயு தாக்கி மூவர் பலி: காஞ்சியில் சோகம்!

விஷவாயு தாக்கி மூவர் பலி: காஞ்சியில் சோகம்!

கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்குதல், மண்சரிவு உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின் போது, 620 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி விஷவாயு தாக்கி உயிரிழப்பதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக 2019ல், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தெரிவித்தது.

இந்த சூழலில் இன்று காஞ்சிபுரம் அருகே கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா கேட்டரிங் இன்டஸ்ட்ரீஸ் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சிப்காட்டில் உள்ள பல நிறுவனங்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

உணவு நிறுவனத்தில் இருக்கும் கழிவுநீர் தொட்டியைச் சுத்தப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் பாக்கிய ராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று பேரை அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்து வெளிப்பட்ட விஷவாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோமங்கலம் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இச்சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து அதன் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இன்னும் மனிதர்களின் கழிவை சக மனிதர்களை வெறும் கையால் அள்ளும் அவல நிலையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 14 பிப் 2021