மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர்

சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர்

நான் சென்னைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 14) சென்னை வந்துள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.35 மணிக்கு வந்த அவர், அங்கிருந்து 10.40 மணியளவில் ‘ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்குக் காலை 11 மணியளவில் வந்தார். சாலையின் இருபுறங்களிலும் நின்ற அதிமுக, பாஜக தொண்டர்கள் கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

அடையார் கடற்படை தளத்தில், பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு கார் மூலம் வந்த பிரதமர் மோடி, அங்கு அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரானது.

இதைத்தொடர்ந்து விழா மேடைக்கு வந்த அவர், ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமருக்குக் கிருஷ்ணர் சிலை ஒன்றைப் பரிசாக வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிகழ்ச்சியில், ஆளுநர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றிப் பேசினார். “சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழகத்திற்கு இரண்டு முக்கிய ரயில் திட்டங்களைக் கொடுத்தமைக்கு நன்றி. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவது மெட்ரோ ரயில் திட்டம் தான். பிரதமரின் நடவடிக்கையால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினராக இருந்தாலும் நல்லதைப் பாராட்டத் தவறாதவர். பிரதமர் மோடியைப் போன்ற ஒப்பற்ற தலைவர்களைக் காண்பது அரிது” என்று புகழாரம் சூட்டினார்.

துணை முதல்வரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது தமிழகத்தில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கத் தமிழகம் வருமாறு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இங்கு வந்தமைக்கு எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி” என தெரிவித்தார். தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை அறிவித்ததற்கும், நீர் மேலாண்மைக்கான சிறந்த விருது தமிழகத்திற்குக் கிடைத்ததற்கும் பெருமைப்படுகிறேன் என்று கூறி அதற்கும் நன்றி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு எனத் தமிழில் பேசத் தொடங்கிய பிரதமர், சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துத் தொடர்ந்து பேசி வருகிறார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 14 பிப் 2021