மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் அல்வா!

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் அல்வா!

மொத்தமாக ஆப்பிள் வாங்கி வைக்கும்போது சில நேரங்களில் சாப்பிட தோன்றாது. இன்றைய காதலர் தினத்தில் ஆப்பிள் அல்வா செய்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிட்டு இந்தத் தினத்தை இனிப்பாகக் கொண்டாடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த ஆப்பிள் அல்வா சத்தானதும் கூட.

எப்படிச் செய்வது?

ஒரு கனமான வாணலியில் கால் லிட்டர் பாலை ஊற்றி அதில் மூன்று துருவிய ஆப்பிள்களைச் சேர்த்து நன்கு வேகவிடவும். சிறிது பாலில் 250 கிராம் கோதுமை மாவைக் கரைத்து நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி அரை டீஸ்பூன் கேசரி பவுடரையும் சேர்த்துக் கிளறவும். அதனுடன் 500 கிராம் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி சற்று இறுகியதும் அதில் 159 கிராம் நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் 10 முந்திரி, 10 பாதாம், அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கி விடவும். ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

சிறப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 14 பிப் 2021