மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

மாமியாரின் உடலை அனுமதிக்காத மருமகள்: இறுதிச்சடங்கு செய்த பக்கத்து வீட்டுக்காரர்!

மாமியாரின் உடலை அனுமதிக்காத மருமகள்: இறுதிச்சடங்கு செய்த பக்கத்து வீட்டுக்காரர்!

மாமியாரின் உடலை வீட்டுக்குக் கொண்டு வர மருமகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தாமாக முன்வந்து உதவி செய்த பக்கத்துக்கு வீட்டாரின் செயலை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மீனாம்பாள். இவர் கணவர் நடேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மீனாம்பாளுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் முருகன், கடந்த வருடம் எதிர்பாராத விபத்து ஒன்றில் பலியானார். மகனது இழப்பால் மீனாம்பாள் நிலைகுலைந்து போனார்.

முருகனின் இறப்புக்குப் பிறகு, மீனாம்பாளுக்கும் முருகனின் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்த நிலையில்தான், அந்த மருமகள், மாமியார் மீனாம்பாளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வேறு வழியின்றி அறந்தாங்கியில் உள்ள தன் மகளின் வீட்டுக்குச் சென்று வாழ்க்கையைக் கழித்து வந்துள்ளார் மீனாம்பாள். மகளின் வீட்டில் வசித்துவந்த மீனாம்பாள், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மகளின் வீட்டிலேயே இறந்து போயுள்ளார். மீனாம்பாள் உடலை அவர் வாழ்ந்த இடத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர் மீனாம்பாள் உறவினர்கள். எனவே, ஆவணத்தாங்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு உடலைக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மாமியாரின் உடலை வீட்டுக்குக் கொண்டு வருவதை அறிந்த மருமகள், யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் கதவுகளைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

மீனாம்பாளின் உடலை வீட்டுக்கு வெளியே வைத்துக்கொண்டிருந்த உறவினர்கள், மருமகளிடம் எவ்வளவோ பேசிப்பார்த்தும் அதற்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாறாக, ‘என்னுடைய அனுமதியை மீறி மாமியாரின் உடலை வீட்டுக்குள் கொண்டு வந்தால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று கூறி உறவினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மீனாம்பாளின் உடலை வீட்டுக்கு வெளியே வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உறவினர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

மீனாம்பாளின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவர் இளஞ்செழியன். வெளிநாட்டில் வேலைபார்க்கும் இவரிடம், அவரின் மனைவி நடந்த சம்பவத்தை போனில் கூற, ‘நம் வீட்டில் வைத்து இறுதிச்சடங்குகளை நடத்துங்கள்’ என்று கூறியவர், ‘நல்லா வாழ்ந்த மனுசி, எங்க வீட்டுல வச்சு அவங்க ஈமச் சடங்குகளைச் செய்து நல்லபடியா அடக்கம் செய்யுங்க, நானே எல்லா செலவையும் ஏத்துக்கிறேன்’ என்று இளஞ்செழியன் சொல்ல, அவரது வீட்டில் வைத்து மீனாம்பாளின் இறுதிக் காரியங்கள் நடைபெற்றன.

மேலும், பெற்ற மகன் முருகன் செய்ய வேண்டிய ஸ்தானத்தில் இளஞ்செழியனின் குடும்பத்தினர் இருந்து மீனாம்பாளின் இறுதிச் சடங்குகளைச் செய்து அனைவரையும் நெகிழ வைத்திருக்கின்றனர். ஊர் கூடி மீனாம்பாளின் இறுதிச்சடங்கு நடைபெற்றிருக்கிறது. மாமியாரின் உடலை வீட்டுக்குக் கொண்டு வர மருமகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தாமாக முன்வந்து உதவி செய்த இளஞ்செழியன் மற்றும் அவர் மனைவியின் செயலை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 13 பிப் 2021