மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு உதவிய ரோஹித்தின் 161 ரன்கள்!

இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு உதவிய ரோஹித்தின் 161 ரன்கள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 161 ரன்கள் அடித்து தோல்விப் பாதைக்குச் சென்ற இந்திய அணியைக் காப்பாற்றியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 13) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் இளம் வீரர் சுப்மான் கில் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து, ரோஹித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். புஜாரா வழக்கம் போல தடுப்பாட்டம் ஆட ரோஹித் சர்மா சற்று அதிரடியாக ஆடினார். நிதானமாக ஆடி வந்த புஜாரா 21 ரன்களில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் கோலி, மோயின் அலி சுழலில் சிக்கி ரன்கள் எதுவும் எடுக்காமல் போல்டு ஆனார். 86 ரன்களுக்குள் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து, ரோஹித் சர்மாவுடன் துணை கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதால், ரன் வேகம் சீராக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடிக்கும் 7ஆவது சதம் இது.

பொறுப்புடன் ஆடிய ரஹானே அரை சதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 161 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீக் பந்து வீச்சில் வெளியேறினார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ரஹானேவும் மொயின் அலி பந்து வீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரிஷப் பந்த் அவரது அதிரடி ஆட்டத்தை வழக்கம் போல தொடர்ந்தார்.

இந்த நிலையில் அஷ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் பந்து வீச்சில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து ரிஷப் பந்த்துடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது.

ரிஷப் பந்த் 33 ரன்களுடனும் அக்‌ஷர் படேல் 5 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச், மொயின் அலி 2 விக்கெட்டுகளும் ஸ்டோன் ரூட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியைக் காண 50 சதவிகிதம் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 13 பிப் 2021