மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

எல்லா இடத்திலும், எந்த நேரத்திலும் போராட முடியாது: உச்ச நீதிமன்றம்!

எல்லா இடத்திலும், எந்த நேரத்திலும் போராட முடியாது: உச்ச நீதிமன்றம்!

போராட்டம் நடத்தும் உரிமை எந்த நேரமும் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துக் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லி ஷாஹின்பாக்கில் 2019 டிசம்பர் 14ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி காவல் துறையினரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றால் தான் போராட்டத்தை திரும்பப் பெறுவோம் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர்.

இந்நிலையில் ஷாஹின்பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டம் அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்ததாகக் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் அனிருத்தா போஸ் , கிருஷ்ணமுராரி அமர்வு, 'பொது இடங்களை காலவரையறையின்றி ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. ஷாஹின்பாக் மட்டுமல்ல எந்த பொது இடத்தையும் காலவரையறையின்றி ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவதை நாங்கள் ஏற்க முடியாது. இது சட்டத்திற்குப் புறம்பானது’ என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் 12பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு அதே நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் மறுபரிசீலனைக்கு உத்தரவாதம் அளிக்கும் பிழை எதுவும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அப்போது போராட்டம் நடத்தும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா நேரங்களிலும் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. போராட்டம் என்னும் பெயரில் பொது இடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொள்வது பிறரின் உரிமைகளைப் பாதிக்கும். பிறரின் உரிமைகள் பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துவதையும் ஏற்கமுடியாது. எனவே ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் திருத்தம் செய்யவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ தேவையில்லை என்று குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 13 பிப் 2021