மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

பட்டாசு ஆலை விபத்து: பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமி!

பட்டாசு ஆலை விபத்து: பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமி!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன குளத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி மற்றும் குத்தகைதாரர்கள் சக்திவேல், சிவக்குமார் , பொண்ணு பாண்டி ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், குரங்குடி பகுதியைச் சேர்ந்த பாக்கிய ராஜ் - செல்வி தம்பதியினர் உயிரிழந்தனர். இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது இவர்களது குழந்தை நந்தினி(12) 7ஆம் வகுப்பு படிக்கிறார்.

தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தை இன்று பெற்றோர்களை இழந்து அவர்களின் உடல்களைப் பெற உறவினர்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனை பிணவறையில் முன்பு காத்திருந்தது காண்போரைக் கண்கலங்கச் செய்திருக்கிறது. இதில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் வழக்கமாக நந்தினியையும் ஆலைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் நேற்று அழைத்துச் செல்லவில்லை என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் தாய் தந்தையை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் சிறுமியின் எதிர்கால நலன் கருதி அரசு உதவ முன்வர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதிமுறைகளை மீறியதால் தான் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் இனி இதுபோன்று ஒரு விபத்து ஏற்பட்டு உயிர்ப் பலியும், அன்பானவர்களை இழந்து குடும்பத்தினர் தவிக்கும் நிலையும் ஏற்படாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 13 பிப் 2021