மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில், நாளை காலை 11.15 மணியளவில்,, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராஹிம் சாலை, மின்ட் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்சர், பின்னி ரோடு, மார்ஷல் ரோடு, நாயர் பாலம் வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

சவுத் கெனால் ரோட்டிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 13 பிப் 2021