மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது விநியோகம்!

பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது விநியோகம்!

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 13) தொடங்கி வைத்தார்.

கடந்த 5ஆம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் 16 லட்சம் விவசாயிகளின் ரூ.12 ஆயிரம் கோடி விவசாயக் கடனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, 10 தினங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான ரசீது வழங்கப்படும் என்று அரக்கோணம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் ரசீது வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், வட தண்டலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனுவாசன் வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்த ரசீது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் உதவியைப் பெற 1100 சேவை எண் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 1100 எண்ணுக்கு அழைத்து அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல்துறை சார்பில் கீழடி அகழாய்வின் அடுத்தகட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். இதன்மூலம், கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய 4 இடங்களில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி நடக்கவுள்ளது.

-பிரியா

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

சனி 13 பிப் 2021