மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

2ஆம் தவணை தடுப்பூசி தவறாமல் செலுத்தவும் : சுகாதாரத் துறை செயலர்!

2ஆம்  தவணை  தடுப்பூசி தவறாமல் செலுத்தவும் : சுகாதாரத் துறை செயலர்!

தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 28 நாட்கள் முடிந்தவர்கள் தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று (பிப்,13) முதல் இரண்டாம் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில் அம்மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் சுகாதார துறை செயலர் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்தி கொண்டார். அதனைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

"ஜனவரி 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது, அன்றைய தினம் தடுப்பூசி செலுத்தி கொண்ட 3 ஆயிரம் பேருக்கு இன்று இரண்டாம் தவணையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 28 நாள் முடிவடைந்தவர்கள் அனைவரும் 2ஆம் தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 2.27 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக கூறிய அவர் 30,345 பேர் சென்னையிலும், 15906 பேர் கோவையிலும், 10506 பேர் மதுரையிலும், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களிலும் அதிகபட்சமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தடுப்பூசி வீணாகிறது என்ற செய்தி வருகிறது தடுப்பூசி செலுத்தும் போது 10% அதாவது 13191 மருந்துகள் வீணாகி உள்ளது. இந்த மருந்துகள் தூக்கி எறியப்பட்டவை இல்லை. ஒரு நாளுக்கு 10 பேர் தடுப்பூசி போட திட்டமிட்டு 2 பேர் வரவில்லை என்றால் அது வீணாகும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் பயன்படத்த முடியாது. இதனால் தான் வீணாகியுள்ளதாக தெரிவித்தார்.

சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள 20ஆம் தேதி வரை நேரம் உள்ளதால் இந்த நேரத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் முன்கள பணியாளர்களுக்கு 17ஆம் தேதி வரை முன்பதிவு செய்ய அவகாசம் உள்ளது மற்றவையும் படிப்படியாக தொடங்கும் என்றார்.

தமிழகத்தில் அதிகளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளோம். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என கூறிய அவர்,

இந்த சமயத்தில் ஆங்காங்கே டெங்கு பரவும் சூழலும் உள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.

ஞாயிறுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்துவதில்லை ஆனால் இரண்டாம் தவணை என்பதால் நாளைய தினம் ஞாயிற்றுகிழமையும் முகாம் செயல்படும் எனவும் கூறினார்.

கவின்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

சனி 13 பிப் 2021