மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

மின்சார ரெயில்களில் அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணம் செய்யலாம்!

மின்சார ரெயில்களில் அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணம் செய்யலாம்!

சென்னை மின்சார ரெயில்களில் அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணம் செய்ய வருகிற 15ஆம் தேதியில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை மின்சார ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வர, மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. முதலில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் பெண்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15ஆம் தேதி முதல் சென்னை மின்சார ரெயில்களில் அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 12 பிப் 2021