மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

பட்டாசுக் கொடூரம்: 11 பேர் பலி!

பட்டாசுக் கொடூரம்: 11 பேர் பலி!

பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படுவதும் அதன் பின் ஆலைகளின் பாதுகாப்பு பற்றி விவாதம் எழுவதும் ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும் இயல்பாகிவிட்டது. இந்த நிலைமையில் இன்று (பிப்ரவரி 12) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

படு பயங்கரமான சத்தத்தோடு, புகை மூட்டத்தில் மூச்சுத் திணறியும் வெடிபாடுகளில் சிக்கியும் 11தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை அச்சங்குளத்தில் இருக்கிறது. இந்த ஆலையில் 30 க்கும் மேற்பட்ட அறைகளில் நவீன பேன்சி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இன்று பகல் ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் மளமளவெனெ பரவி, பக்கத்திலுள்ள 6 அறைகளிலும் இருந்த வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின.

இதில், ஏழையிரம்பண்ணையைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் உள்பட 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் கிடைத்து அருகே உள்ள மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூரத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

‘விருதுநகரில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 12 பிப் 2021