மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர்கள் கைது!

மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை:  ஆட்டோ ஓட்டுநர்கள்  கைது!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற மாணவியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஃபார்ம் (B.Pharm) படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் பயணித்து அங்குள்ள நாகாராம் சௌராஷ்டிரா பகுதியை அடைந்தார். பின்னர், அங்கிருந்து குடும்பத்துடன் வசித்து வரும் ஆர்.எல்.நகர் காலணிக்கு செல்ல 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் ஏறினார். வழக்கமாக, அந்த ஆட்டோவில் தான் அந்த மாணவி தன்னுடைய வீட்டுக்கு பயணம் செய்து வந்தார்.

இந்நிலையில், மாணவி ஆட்டோவில் இருந்த போது ஒரு பெண் உட்பட 2 பேர் அதில் இருந்தனர். சிறிது தூரம் சென்ற பின் அந்த பெண் ஆட்டோவிலிருந்து இறங்கி சென்றுவிட்டார். இந்நிலையில், ஆட்டோ டிரைவர் மற்றும் அதிலிருந்து மற்றொரு வாலிபர் ஆகியோர் அந்த மாணவியை அங்கிருந்து கடத்தி சென்றனர். தான் இறங்கி செல்ல வேண்டிய பகுதியை ஆட்டோ வந்து அடைந்த பின்னரும் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த மாணவி தன்னை ஆட்டோ டிரைவர் கடத்தி செல்வதாக செல்போன் மூலம் தன்னுடைய குடும்பத்தாருக்கு தகவல் அளித்தார்.

தொடர்ந்து உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மூலம் மாணவி கடத்தப்படுவது பற்றிய தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், மாணவியை கடத்தி வருவது பற்றி ஆட்டோ டிரைவர் தன்னுடைய நண்பர்களான மேலும் 4 பேருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் நான்கு பேரும் கார் ஒன்றில் தயாராக காத்திருந்தனர். கார் இருந்த இடத்திற்கு ஆட்டோ வந்தபின் மாணவியை காரில் ஏற்றி 6 பேரும் அங்கிருந்து கடத்தி சென்றனர்.

இந்நிலையில், காவல்துறையினர் ஜிபிஎஸ் மூலம் மாணவி இருக்கும் பகுதியை கண்டுபிடித்து, பத்து காவல் வாகனங்களில் அங்கு விரைந்தனர். இதற்கிடையில் மாணவியை ஆறுபேரும் கடுமையாக தாக்கி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மயக்கமடைந்த நிலையில் கிடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இந்த நிலையில் இன்று (பிப்,12) ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கட்கேசர் காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மாணவியை அழைத்து சென்ற ஆட்டோவை கண்டுபிடித்து அதன் டிரைவர் ராஜ் என்பவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, ஆட்டோ ஓட்டுநர் ராஜ் அளித்த தகவலின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ராஜ் நண்பர்களான சிவா, நந்தன், பாஸ்கர், ரமேஷ், குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் எண்ணம் பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆவர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 12 பிப் 2021