மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளைச் சேர்க்கலாமா?

கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளைச் சேர்க்கலாமா?

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளைச் சேர்க்கக் கோரிய மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில், அனைத்து துறை சார்ந்த முன் களப்பணியாளர்கள் மற்றும் வயது மூத்தவர்கள் என முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளையும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சமூகநீதி முன்னேற்றத்துக்கான மைய இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் கொரோனா தடுப்பு விதிகளான தனிமனித விலகல் போன்றவற்றைப் பின்பற்றுவதில் மாற்றுத்திறனாளிகள் சவால்களைச் சந்திக்கின்றனர். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்கள் உயிரிழக்கவும் நேரிடுகிறது. 50 வயதுக்குக் குறைவான பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னுரிமை அளித்த மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கத் தவறிவிட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா, போன்ற நாடுகளில் தடுப்பூசி போட மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, இம்மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 12 பிப் 2021