மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: சிவப்பரிசி கஞ்சி!

ரிலாக்ஸ் டைம்: சிவப்பரிசி கஞ்சி!

மென்று சாப்பிட முடியாதவர்கள், விழுங்க முடியாதவர்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் மட்டுமே கஞ்சியைச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களும் கஞ்சியை அருந்தலாம். ரிலாக்ஸ் டைமில் சத்தான இந்த சிவப்பரிசி கஞ்சியை அருந்தினால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் 100 கிராம் சிவப்பரிசியை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் ரவையாக உடைத்தெடுக்கவும். ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு தலா அரை டீஸ்பூன் வெந்தயம், சீரகம் தாளிக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, வெங்காயம் ஒன்று, தக்காளி ஒன்று சேர்த்து வதக்கவும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி ரவை, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து இரண்டு டீஸ்பூன் தேங்காய்த் துருவல், சிறிதளவு மல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்

சிறப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 12 பிப் 2021