மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

சிறைவாசிகளில் 66 சதவிகிதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினர்!

சிறைவாசிகளில் 66 சதவிகிதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினர்!

‘நாட்டின் சிறைகளில் உள்ள சிறைவாசிகளில் பெரும்பாலானவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்... பிரிவு வாரியாக சிறைவாசிகளின் எண்ணிக்கை வேண்டும்’ என்று நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. சையத் நசீர் உசைன் கோரியிருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும்விதமாக, தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தொகுத்த புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், “நாடு முழுவதும் சிறைகளில் 4 லட்சத்து 78,600 பேர் உள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 15,409 பேர் அதாவது 65.90 சதவிகிதத்தினர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவையும், 1 லட்சத்து 26,393 பேர் பிற பிரிவுகளையும் சேர்ந்தவர்கள்.

சிறைவாசிகளில் 95.83 சதவிகிதம் பேர் ஆண்கள், 4.16 சதவிகிதம் பேர் பெண்கள். சிறை மற்றும் சிறைவாசிகளின் நிர்வாகம் என்பது அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பு. ஆனாலும் சிறைவாசிகளின் மறுவாழ்வு, தொழிற்பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக, மாதிரி சிறை நடத்தைமுறை அறிக்கையைக் கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது” என்று பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 12 பிப் 2021