மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

நாளை ரிலீஸ் இல்லை ;நேரடியாக டிவிக்கு போகும் 'ஏலே'

நாளை ரிலீஸ் இல்லை ;நேரடியாக டிவிக்கு போகும் 'ஏலே'

சமுத்திரகனி நடிப்பில் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் திரையரங்க ரிலீஸூக்காகத் தயாரான படம் ஏலே. இந்தப் படம் திடீரென நேரடியாக டிவியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சில்லுக்கருப்பட்டி படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஹலீதா ஷமீம். இப்படம் திரையரங்கில் எதிர்பார்ப்பின்றி வெளியாகி, பெரியளவில் வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி நிறுவனம் படத்தை வாங்கி வெளியிட்டது. இந்தப் படத்துக்கு முன்பே தயாரான படம் ஏலே. சமுத்திரகனி மற்றும் மணிகண்டன் நடிப்பில் தந்தை மகன் பாசத்தை மையமாகக் கொண்டி நாஸ்டாலஜிக் நினைவுகளோடு படம் உருவாகியிருக்கிறது. இப்படம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மற்றுமொரு படமான தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏலே படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் சில சிக்கல்கள் இருந்தது. தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலனின்றிப் போனதால் படத்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். இந்தப் படத்தை விஜய் டிவி வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி நண்பகல் 3 மணிக்கு ஒளிபரப்புகிறது. ஆச்சர்யகரமான புதிய விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்குக் கொண்டுவர முடியாத சூழல் உருவாகியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் திரையரங்கு இல்லை என்பதால் நேரடியாக ஓடிடிக்கும் டிவிக்கும் படங்கள் வந்தன. மாஸ்டர் படம் வெளியாகி மீண்டும் திரையரங்குகள் புத்துணர்ச்சியுடன் இயங்க துவங்கிவிட்டது. தற்பொழுது, திரையரங்கத்தினரால் ஏற்பட்ட கசப்பான கருத்துவேறுபாட்டால் நேரடியாக டிவிக்கு வந்திருக்கிறது ஏலே. பொங்கல் தின ஸ்பெஷலாக விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ' புலிக்குத்தி பாண்டி' படம் சன் டிவியில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில், தற்பொழுது போட்டியாக ஏலே படத்தை களமிறக்குகிறது விஜய் டிவி.

விஜய் டிவியில் படம் வெளியாவதால் உடனடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகிவிடும். இனி, வரும் காலத்தில் திரையரங்கம் போலவே வாராவாரம் ஓடிடி மற்றும் நேரடியாக டிவியில் படங்கள் வெளியாவது சகஜமாகிவிடும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வியாழன் 11 பிப் 2021