மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

கல்விக் கடன் ரத்து: மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர்!

கல்விக் கடன் ரத்து: மாணவர்களுக்கு  நம்பிக்கை கொடுத்த முதல்வர்!

திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்விக் கடன் ரத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி இந்தியத் தேர்தல் ஆணையம் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதே சமயத்தில் அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பூர் அவினாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் தமிழகம் ஏற்றம் அடைந்துள்ளது என்று தெரிவித்த அவர், அவினாசி அத்திக்கடவு திட்டத்திற்காக 1652 கோடி ரூபாய் மதிப்பில் நான் அடிக்கல் நாட்டி உள்ளேன். அதேபோல முதல்வராக தொடர்ந்து வந்து அந்த திட்டத்தையும் துவக்கி வைப்பேன் என்று குறிப்பிட்டார்.

அவினாசி பகுதியில் ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 58.15 கோடி ரூபாய் மதிப்பில் அன்னூர், அவிநாசி ஆகிய பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டம், 96 கோடி ரூபாய் மதிப்பில் சூலூர், அவினாசி, திருப்பூர் பகுதி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் துயரங்களைத் துடைக்க தற்போது பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அதற்கான ரசீது 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்ட முதல்வர் உங்களின் எதிர்காலம் தான் நாட்டின் எதிர்காலம். எனவே மாணவர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 11 பிப் 2021