மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

புத்துணர்வு முகாம்: திருக்குறுங்குடி யானை அவதி!

புத்துணர்வு முகாம்: திருக்குறுங்குடி யானை அவதி!

மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் கால்களில் காயம்பட்டு அவதியடைந்து வருகிறது திருக்குறுங்குடி யானை. இதற்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மொத்தம் 26 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. இந்த யானைகளுக்கு காலையும் மாலையும் நடைப்பயிற்சி, குளியல், சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

யானைகளின் மருத்துவ சிகிச்சைக்காக முகாமில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் காலை, மாலை இரு வேளையும் யானைகளை பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்திரைகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் (ஜீயர் மடம்) திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் யானை குறுங்குடி வள்ளி பின்னங்கால்களில் சிராய்ப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் திருக்குமரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பாகன்கள் உதவியுடன் குறுங்குடி வள்ளிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 11 பிப் 2021