மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

6,7,8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

6,7,8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு  தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு ஏற்ற வகையில் சுழற்சிமுறையில் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சூழலில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளையும் திறக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 6, 7, 8  ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருவதாகத் தெரிவித்த அவர் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை என்றும் அதற்கு பதிலாக 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்  வழங்கப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு ரூ.5500 மட்டுமே நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழக அரசு 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது என்றார். ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசின் கடிதங்கள் வந்த பிறகு தான், தேர்வை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று விளக்கமளித்தார்.

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வியாழன் 11 பிப் 2021