மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

6, 7, 8ஆம் வகுப்புகளையும் இந்த மாதம் திறக்க ஏற்பாடு!

6, 7, 8ஆம் வகுப்புகளையும் இந்த மாதம் திறக்க ஏற்பாடு!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளைத் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய் தொற்றின் தாக்கம் குறைந்ததன் காரணமாக கல்லூரிகள் டிசம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தொடர்ந்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி அந்த வகுப்புகளும் இந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் முழுமையாக திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிக்கூடங்களில் பாடப்பிரிவுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படுத்தலாம் என்றும், காலை - மாலை என இரண்டு ஷிப்ட் முறையில் நடத்தலாம் என்றும் கல்வித்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து அதற்கேற்ப 9, 10, 11, 12 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்து வந்தாலும் நோய் பரவல் எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும் சுகாதாரத்துறையினர் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பள்ளி கல்வித்துறையும் ஒவ்வொரு பள்ளிகூடங்களிலும் கொரோனா தாக்கம் உள்ளதா. இல்லையா என்பதை தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் தினமும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து அதன்பிறகு தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

இந்த நிலையில், கல்வித்துறை உயரதிகாரி ஒருவர், "அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்த நடைமுறை கடைப்பிடிப்பது சாத்தியமாகி உள்ளதால் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளையும் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மூன்று வகுப்புகளுக்கும் 40 சதவிகிதப் பாடங்களைக் குறைத்து பள்ளிக்கூடங்களை இந்த மாதம் கடைசியில் திறக்கலாமா என அரசு ஆலோசித்து வருகிறது. 6, 7, 8ஆம் வகுப்புகளையும் திறப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 11 பிப் 2021