மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

இந்தியாவில் அதிக விபத்துகள்: கவலை வெளிப்படுத்திய கட்கரி

இந்தியாவில் அதிக விபத்துகள்: கவலை வெளிப்படுத்திய கட்கரி

2025ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவிகிதம் வரை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சாலை கூட்டமைப்பின் இந்திய கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு வரிசையை நேற்று (பிப்ரவரி 9) தொடங்கிவைத்து, “இந்தியாவில் சாலை பாதுகாப்பு சவால்கள் மற்றும் செயல்திட்டத்தை வகுத்தல்” என்ற தலைப்பில் பேசிய மத்திய அமைச்சர் கட்கரி, “இந்தியாவின் நிலைமை மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. விபத்துகளில் உலகத்திலேயே முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. சாலை விபத்துகளில் அமெரிக்கா மற்றும் சீனாவையே நமது நாடு மிஞ்சி விட்டது” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர், 4.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 415 பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர். விபத்துகளால் ஏற்படும் சமூக-பொருளாதார இழப்புகள் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 3.14 சதவிகிதம் நஷ்டம் ஏற்படுகிறது. உயிரிழப்போரில் 70 சதவிகிதம் பேர் 18 முதல் 45 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் எடுத்து வருகிறது. 5,000 ஆபத்து மிக்க பகுதிகள் கண்டறியப்பட்டு செப்பனிடப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் நிதின் கட்கரி.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 10 பிப் 2021